கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் மெக்சிக்கோ நாட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக கனேடிய எல்லைப்புற சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 410ஆக இருந்த எண்ணிக்கை, இவ்வருடம் மார்ச் 9 வரையிலான காலப்பகுதியில் 444ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கனேடிய மத்திய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம், மெக்சிக்கோ நாட்டவர்களிற்கான விசா தேவையை அகற்றியதைத் தொடர்ந்து உடனடியாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 70 மெக்சிக்கோ நாட்டவர்கள் கனடாவில் அகதி கோரிக்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக அறியப்படுகின்றது. கடந்த 2012ஆம் 667 மெக்சிக்கோ நாட்டவர்கள், எல்லைபுற சேவைகள் அதிகாரிகளினால் நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது