பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்களுக்கு அதிரடி தடை
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட் அவுட்கள் வைக்க அதிரடி தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
கனடாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அவரின் கட் அவுட் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்படும்.
இதற்கு கனடாவின் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
கனடாவை பற்றி தான் புகழ் பரப்ப வேண்டுமே தவிர ஜஸ்டின் என்னும் தனி நபர் புகழ்பாடக் கூடாது என அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனை ஏற்று கனடாவின் global affairs Department, ஜஸ்டின் கட் அவுட்களை இனி பொது இடத்தில் வைக்க அதிரடி தடை விதித்துள்ளது.
ஆனால் இது மட்டும் தான் காரணமா அல்லது வேறு காரணம் ஏதேனும் உண்டா என்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை.