பிரித்தானியாவை அடுத்து பெல்ஜியத்தில் மர்ம நபர் பயங்கரம்: அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்
பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் உள்ள வீதியில் காரில் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் தாறுமாறாக காரில் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடந்து அடுத்த சில மணிநேரங்களிலே பெல்ஜியத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் பகுதியில் காலை 11 மணி அளவில் பொதுமக்கள் பலர் இருக்கும் பகுதியில் மர்ம நபர் ஒருவர் தாறுமாறாக காரை ஓட்டி வந்துள்ளார். இதனால் பொதுமக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து அங்கிருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.
Research being done on the car. driver arrested. #antwerpen
இச்சம்பவம் உடனடியாக பொலிசாருக்கு தெரியபடுத்தப்பட்டதால், அவர்கள் அந்த காரை நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் காரை நிறுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த போக்குவரத்து சிக்னலிலும் நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் சிறப்பு படையினர் உடனடியாக அந்த காரை பின் தொடர்ந்து, தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அந்த காரை சோதனை செய்ததில் அதில் கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் திரவ வாயு போன்றவைகள் இருந்துள்ளது. இதனால் பொலிசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
பிரித்தானியவை அடுத்து சில மணிநேரங்களிலே இச்சம்பவம் நடந்துள்ளதால், அவன் தீவிரவாதியாக கூட இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பெயர் மொகமத்(39), இவர் முஸ்லீமாக இருக்ககூடும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இவர் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். ஆனால் இவர் வந்த கார் பிரான்ஸ் நாட்டின் நம்பர் பிளேட்டுகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக இவன் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்வத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு காயங்களும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.