யாரும் கண்டதில்லை இந்தப் புகழ்! தைப் பொங்கல் வாழ்த்து மூலம் பல மில்லியன் தமிழர் இதயங் கவர்ந்த கனடியப் பிரதமர்!
3.1 மில்லியன் தமிழ் மக்கள் கனடியப் பிரதமருடைய உத்தியோகபூர்வ இணைத்தளத்திலேயே Justin’s Pongal Vazhthu மாத்திரம் பார்த்ததாகவும், கனடாமிரர் உள்ளிட்ட பல இணையத் தளங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒளிப்பதிவு வாழ்த்தை இன்னமும் பல பல லட்சம் மக்கள் தமிழ்மக்கள் பார்த்தாகவும் அமைந்திருந்தது கனடியப் பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து.
ஆங்கில பத்திரிகைகள், குறிப்பாக இந்தியாவை, சிங்கப்பூர், மலேசியாவைத் தளமாகக் கொண்டவை பொறமைப்பட்டு “தமிழில்” வணக்கமும் கூறி, தைப் பொங்கல் வாழ்த்தும் கனடியப் பிரதமர் என்று செய்தி வெளியிடுமளவிற்கு இது பெருமிதம் கண்டிருந்தது.
கனடாவில் தேசிய அளவில் தமிழர் மரபுரிமை மாதமாக தைமாதம் அறிவிக்கப்பட்டதையும் அவரது செய்து வெளிப்படுத்தியிருந்தது. இந்தளவிற்கு மற்றவர்களால் புகழப்பட்ட கனடியப் பிரதமருக்கு,
தமிழர்களிடம் கிடைத்த ஆதரவு என்பது கனடாவைத் தாண்டியும் வியாபித்திருக்கின்றது என்பதைத் தான் பல மில்லியன் மக்கள் பார்த்த அவரது வாழ்த்துத் தெரிவித்திருந்தது. இளைஞனுக்கேயுரிய துடியாட்டம் தமிழர்களுடன் சிலம்பாட்டம், தமிழர்கள் விழாவில் அவர்களின் உடை என அவர் பல முகங்களைக் கொண்டிருந்தாலும்,
கனடியப் பிரதமரின் நிழலில் தமிழர்களிற்கு ஒரு தீர்வு கிடைக்க அவருடைய அமைச்சர்கள் சமர்ப்பித்த திட்டங்கள் முன்னெடுகப்பட்டால் அது அவரை இன்னமும் உயர்ததி வைக்கும். ஆதற்கான வெளிச்சங்கள் தெரிவதாகவே அவருக்கு நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு இவாங்க றம்ப் உடனான நட்பின் மூலம் ஒரு டொனால்ட் றம்ப் அவர்களுடனான ஒரு நட்புறவாடலை கனடாவிற்கு ஏற்படுத்தினாரோ அவ்வாறான வேறுபட்டதொரு இராஜதந்திரத்தை இலங்கை விவகாரத்திலும் அவர் செய்வதற்கான முயற்சிகளிற்கு வித்திடவேண்டும்.
அவரது தைப்பொங்கல் வாழ்த்தை பார்த்தவர்களின் எண்ணிக்கை அவரை, அவர் சார்ந்தவர்களைப் பிரமிக்க வைத்தாலும் அதனிலும் மேலான உறவாக அவரது தென்னாசியப் பயணம் “விரைவாக” அமைய வேண்டுமென்பதே அரசியலாளர்களின் விருப்பாகும். யார் சிறந்த அரசியலாளர் என்றால் அனைத்துக் கைகளும் ஜஸ்ரினையே சுட்டிக்காட்டும். நேர்மையாக இருக்கின்றார்.