போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீளவில்லை
கனடா – ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் யோன் ரொர்ரி கடந்த19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலுக்கு சென்று இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வடக்கில்இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் தாக்கத்தில் இருந்து மீளவில்லை என்பதை யோன் ரொர்ரி கண்டறிந்துள்ளார்.
தனது பாதங்களை அந்த மண்ணில் பதிக்கும் போது அவரின் பார்வை அங்கே காணப்பட்ட யுத்த சிதைவுகளை நோக்கி சென்றுள்ளது.
அத்துடன், கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நினைவிடம் பூ மரங்களினால் சூழ்ந்து அமைதியாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.
ஆனால் அவர் அந்த இடத்திற்கு சென்றதும் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்கள் தாக்குதலில் இருந்து இன்று வரை மீளவில்லை என்பதை அந்த இடம் நிரூபித்துள்ளது.
மேலும் பொதுமக்களின் உடமைகள் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்ட தடயங்களை அவர் அவதானித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலுக்கு சென்ற யோன் ரொர்ரியின் வருகைக்காக காத்திருந்த மக்கள் பிரதிநிதிகள் அவரை அன்புடன் வரவேற்றுள்ளனர். அவரின் முகத்தில் காணப்பட்ட புன்னகை யுத்த சூழலைப் பார்த்ததும் மறைந்துள்ளது.