மைக்ரோமேக்ஸின் இரட்டை கமெரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன்! அசத்தும் அம்சங்கள்
இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இரட்டை கமெரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் 29ம் திகதி நடைபெறவுள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழாவில் இரட்டை கமெரா கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மைகர்ரோமேக்ஸ் E4815 (F620) மாடல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது.
இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் MT6750T 64 -பிட் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
இத்துடன் 5 எம்பி செல்பி கமெரா, செல்பி பிளாஷ் வழங்கப்படுவதோடு முன்பக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மைக்ரோமேக்ஸ் பாரத் ஒன் மற்றும் பாரத் டூ என்ற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்த போன்கள் 1,999 மற்றும் ரூ.2,999 விலையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டது.