நயன்தாராவின் டோரா படத்துக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்- அதிர்ச்சியில் படக்குழு
காஷ்மோரா படத்துக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னும் படம் வெளியாகவில்லை. அடுத்ததாக தற்போது தாஸ் ராமசாமி இயக்கியிருக்கும் டோரா படம் வெளியாக இருக்கிறது. இப்பட பாடல்கள், டீஸர், புகைப்படங்கள் என ஏற்கெனவே வெளியாகி கலக்கி வருகிறது.
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழுவினர் A சான்றிதழ் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
ஆனால் படக்குழுவோ U/A சான்றிதழையாவது பெற மறு தணிக்கைக்கு செல்லலாமா என்று யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மார்ச் 31ம் தேதி பட ரிலீஸ் என்பதால் மறு தணிக்கைக்கு இடம்யில்லை என்று தெரிகிறது.
இந்த திரில்லர் படத்துக்கு மெர்வின், சாலோமன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.