தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம்: காரணம் வெளியானது
தெற்கு சூடானில் மோசமான வானிலை காரணமாக தரையிரங்கும் போது பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த 44 பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின.
தெற்கு சூடானின் ஜூபாவில் இருந்து வாவு விமான நிலையத்திற்கு தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ் க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்தது.
விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் செய்திகள் வெளியாகின.
இதில் 44 பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்க கூடும் என்று முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.
எனினும் 43 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும், இதில் 40 பேர் பெரியவர்கள் என்றும் 3 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானம் விபத்திற்குட்பட்ட சில மணி நேரங்களில் உடனடியாக செயற்பட்ட மீட்புக்குழுவினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் அங்கிருந்த பயணிகள் அனைவரையும மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 25 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றைய 18 பேரும் பாதுகாப்பாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இவ்விபத்து மோசமான வானிலை காரணமாகவே ஏற்பட்டதாகவும், தரையிறங்கும் போது எதுவும் சரிவரத் தெரியாத காரணத்தினால ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதில் பயணிகளுக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான காயங்கள் தான் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.