ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறினால்? எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
பிரித்தானியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும், கணிதவியல் நிபுணருமான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அண்மையில் பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தான் விண்வெளிக்கு செல்லப் போவதாகவும், இந்த வாய்ப்பை தனக்கு ரிச்சர்ட் பிராண்ட்ஸ்சன் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவர்களிடம் தான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். இருப்பினும் விண்வெளிக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைத் தான் நினைத்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து சரிவர தெரியவில்லை என்றும் அப்படி பிரித்தானியா வெளியேறினால் உலகத்தை விட்டே வெளியேறிவிட்டோம் என்று எண்ண வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நாம் ஐரோப்பா மற்றும் உலகின் பிறபகுதிகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினால் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு போன்றவைகளில் சரிவை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.