இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி: போட்டுத் தள்ளிய அமெரிக்க படை
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன், அமெரிக்க படை நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதல் மூலம் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அணி கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தலைவர் ஜெயவர்த்தனே, திலன் சமரவீரா, குமார சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், தரங்கா பிரனவினதா, சமிந்தா வாஸ் என 6 பேர் படுகாயமடைந்தார்.
இலங்கை அணிக்கு பாதுகாப்புக்கு வந்த 5 பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கு தொடர்புடைய Qari Yaseen என்பவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க படைகள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் Qari Yaseen மற்றும் அவனுடன் இருந்து மூன்று பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.