விமானத்தில் உயிருக்கு போராடிய 262 பயணிகள்
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் எந்த ஒரு விபரீதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமானநிலையத்தில் இருந்து போலாந்தின் ரிஷிசவ் பகுதிக்கு போயிங் 767 என்ற விமானம் சென்றுள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 262 பயணிகள் மற்றும் 10 விமான பணியாட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விமான புறப்பட்டுச் சென்ற போது திடீரென்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் தரும் கருவி செயல் இழந்துவிட்டதால், விமானத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்துள்ளது.
இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவர்களுக்கு விமானத்தில் அவசர கால கட்டத்தில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த அவர்கள் எப்படியாவது நல்ல நிலையில், விமான தரையிரங்கிவிட வேண்டும் என்றும் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு தொடர்ந்து பிரார்த்தனை செய்த படியே இருந்துள்ளனர்.
அதன் பின்னர் விமானம் பத்திரமாக நெதர்லாந்தில் உள்ள அம்ஸிடர்ம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதில் பயணிகள் அனைவருக்கும் எந்த காயங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.