முதல்வராக முயற்சிக்கும் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி முடிவு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து விலகலாம் அல்லது கட்சியை கைப்பற்றலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் முதல்வரும் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்தவருமான எடப்பாடி பழனிச்சாமியை சமீபகாலமாக டிடிவி தினகரன் புறக்கணித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தினகரன் தனியாக தான் பேசினார்.
இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் வெற்றி பெற்றால் தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றி விடுவார் என கூறப்படுகிறது.
இதனால், முதல்வர் பதவியை தக்க வைத்து கொள்ள தான் சேர்ந்த சமூகத்தினரை எடப்பாடி தனக்கு ஆதரவாக திரட்டி வருவதாக தெரிகிறது.
தினரகன் முதல்வராக முயற்சித்தால், அதிமுக-வில் இருந்து விலகல் அல்லது அதிமுக-வை கைப்பற்றும் நடவடிகையில் முதல்வர் எடப்பாடி ஈடுபடலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது..