18 மாதகால தமிழ் மக்களின் பொறுமைக்கு நீதி வேண்டும் : ஐ.நாவில் கோரிக்கை
உள்நாட்டு யுத்தம் காரணமாக பாதிப்புக்குள்ளானவர்கள் கடந்த 18 மாதங்களாக பொறுமையுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக காணாமல் போனவர்களின் தாய்மார்கள், கணவனை இழந்தவர்கள் மற்றும் அநாதைகளுக்கு உரிய நீதியை வழங்க உறுதி செய்ய வேண்டும்.
தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட பொதுமக்களை உடனடியாக விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி மானிக்கவாசகர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.