கோஹ்லியை ஸ்மித் சீண்டியதால் வெடித்தது சர்ச்சை! உண்மையை அம்பலப்படுத்திய புகைப்படம்
ராஞ்சியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை, ஸ்மித் சீண்டியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்திய அணித்தலைவர் கோஹ்லி முதல்நாள் ஆட்டத்தின் போது காயமடைந்து தோள்பட்டையை பிடித்த படி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் ஓய்வுக்கு பின்னர், களமிறங்கி துடுப்பாடிய கோஹ்லி, கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பந்தை பிடித்த ஸ்மித், தோள்பட்டையை பிடித்தபடி ஓடி வந்து கோஹ்லியை சீண்டியதாக ஒரு புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது, அந்த நிகழ்வின் உண்மையான படம் வெளியாகியுள்ளது. அதில், ஸ்மித் தோளில் மற்றொரு வீரரின் கை உள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
யாரே சிலர் குறித்த புகைப்படத்தை தொகுத்து தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.