கனடாவில் செய்யப்பட்ட முதலாவது காந்த அறுவை சிகிச்சை!
மனிரோபா- குறு நடை பயிலும் மனிரோபாவை சேர்ந்த 15-மாதங்களே ஆன ஒலிவியா பெஸ்லெர் கனடாவிலேயே ஒரு புது வகையான காந்தங்களை உபயோகித்து செய்யும் முதலாவது தொண்டை அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டாள்.
மனிரோபாவில் பிரான்டனை சேர்ந்த இக்குறுநடை போடும் குழந்தை உரிய காலத்திற்கு ஆறு வாரங்கள் முன்னதாக பிறந்தாள். இவளது உணவு குழாய்கள் வயிற்றுடன் இணைந்திருப்பதற்கு பதிலாக நுரையீரல் மூச்சு குழாய்களுடன் இணைந்திருந்துள்ளது–இது ஒரு வகை பிறப்பு குறைபாடாகும்.
இது ஒரு வகை அரிய நோயாகும். இத்தொடர்பு காரணமாக உணவு வயிற்றிற்குள் செல்வது தடுக்கப்படுகின்றது. உடனடியான அறுவை சிகிச்சை தேவைப்படும்.
ஒலிவியாவின் முதிரா நிலைகாரணமாக அறுவை சிகிச்சை படிப்படியாக செய்ய வேண்டியதாக அமைந்தது. சில மாதங்களின் பின்னர் புதிய இணைப்பு முற்றாக தடைபட்டு மேலதிக செயல் முறை தேவைப்படும். மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை என்பது இன்னுமொரு துளையிடலாகும்.
முதலாவது தடவை அவளால் நன்றாக கையாள முடியவில்லை. ஆனால் டாக்டர் ஒரு யோசனையை தெரிவித்தார்.ஒரு புதிய முறையான அறுவை சிகிச்சை.குறைந்த துளைத்தலை கொண்ட செயல் முறை யு.எஸ்சில் நடை முறைப்படுத்தப்பட்டது. காந்த அமுக்கம் என அழைக்கப்படுகின்றது.
இந்த நடை முறையில் சக்தி வாய்ந்த காந்தங்கள் கொண்ட இரண்டு வடி குழாய்கள் துண்டிக்கப்பட்ட உணவு குழாயில் பொருத்தப்படுவதாகும் . பல நாட்களில் காந்தங்கள் உணவுகுழாய்களின் இரண்டு முடிவுகளையும் ஒன்றாக இணைக்கும். இது இறுதியில் ஒரு புதிய தொடர்பை உருவாக்கும் அதன் பின்னர் காந்தம் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல் முறை கனடாவில் ஒரு போதும் நடைமுறை படுத்தப்படவில்லை என டாக்டர் கெய்ஷர் கூறினார். கனடாவின் முதலாவது நோயாளி ஒலிவியா ஆவார். இது ஒரு புதுமையான சிகிச்சை முறையாகும்.