கனடிய மாணவர்களே! உங்களிற்காக காத்திருக்கும் $10K கல்வி உதவி தொகை!
ரொறொன்ரோ- கனடாவின் 150வது பிறந்த நாளை கொண்டாட கூகுளின் முகப்பக்கத்தில் தேடல் பொறி பதாகையின் உச்சியில் போடுவதற்கான ஒரு பிரத்தியேக வடிவமைப்பை சமர்ப்பிக்குமாறு கூகுள் கனடிய மாணவர்களை கேட்டுள்ளது.
மழலையர் பள்ளி முதல் 12வது தரம் வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
“What I see for Canada’s future is…” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். “Google doodle “
வெற்றி பெறும் மாணவனின் [doodle] வடிவமைப்பு, படைப்பாற்றல், அசல் தன்மை ஆகியனவற்றினை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படும். இந்த வடிவமைப்பு[ doodle] முகப்பு பக்கத்தில் ஒரு நாளைக்கு காட்சிப்படுத்தப்படும்..
வெற்றி பெறும் மாணவன் 10,000 டொலர்கள் கல்வி உதவி தொகை, மாணவரின் பாடசாலைக்கு ஒரு 10,000 டொலர்கள் தொழில் நுட்ப மானியம் மற்றும் அத்துடன் குறிப்பிட்ட வடிவமைப்பு யூன் 13 ரொறொன்ரோவில் எங்கு வெளிப்படுத்தப்படுகின்றதோ அங்கு செல்வதற்கு கட்டணம் செலுத்திய பயணவாய்ப்பு போன்றன வழங்கப்படும்.
மாணவர்கள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு நடுத்தர வடிவமைப்பை கணனி குறியீட்டுடன் சமர்ப்பிக்கலாம் என கூகுள் தெரிவிக்கின்றது.
கூகுள் பணியாளர்கள் மற்றும் விருந்தினர், நீதிபதிகள்-மத்திய அறிவியல் அமைச்சர் கிறிஸ்டி டன்கன்-உட்பட.
இதற்கான நுழைவு விண்ணப்பம் மற்றும் போட்டி நிபந்தனைகள் போன்றவற்றை மாணவர்கள் பெற்றோர்கள் g.co/d4gcanada ல் பதிவிறக்கம் செய்யலாம்.