யாகூவின் மின்னஞ்சல்கள் ஊடுருவல்.கனடியர் ஒருவர் கைது!
ரொறொன்ரோ–கசாக்கை தாயகமாக கொண்ட கனடியர் ஒருவர் பாரிய அளவில் யாகூ மின்னஞ்சல்களை ஊடுருவிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.-இந்த பெரிய அளவிலான ஊடுருவலில் கைது செய்யப்பட்ட நால்வரில் இவரும் ஒருவராவார்.
22-வயதுடைய கரிம் பரரோவ அன்காஸ்ரர் ஒன்ராறியோவில் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிகாரிகளின் கோரிக்கையில் கைது செய்யப்பட்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.
பராரோவ் எந்தவித சம்பவமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு ஆர்சிஎம்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பிராவோவ் மற்றும் மூவர் -இருவர் ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் கணனி ஊடுருவல் பொருளாதார உளவு மற்றும் கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டள்ளது.
நால்வரும் யாகூவின் கணனி அமைப்புக்களின் திட்டங்களை உடுருவி 500மில்லியன்களிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் கணக்குகளை திருடியுள்ளனர்.
2016ல் அதிபர் தேர்தலின்போது ஊடுருவல் மூலம் ரஷ்யா நுழைந்ததை குறித்து மத்திய அதிகாரிகள் புலன் விசாரனை செய்த போது தெரியவந்ததாக கூறப்படுகின்றது.
இக்குற்றச்சாட்டுக்கள் குறைந்தது 2114ன் ஆரம்பத்தில் தொடங்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது. ஊடுருவப்பட்ட யாகூவின் நெட்வேர்க்குகள் டிசம்பர் 2016ல் நிறுத்தப்பட்டன.