காலநிலை-சம்பந்த விபத்தில் ஒருவர் மரணம்.28பேர்கள் காயம்.
நெடுஞ்சாலை 401ஒன்ராறியோ கிழக்கு பாதை புதன்கிழமை காலை ஏற்பட்ட காலநிலை சம்பந்தப்பட்ட விபத்து காரணமாக இன்னமுமு மூடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 28பேர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர. விபத்தின் போது இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இரசாயன கொள்கலனை அகற்றும் முயற்சியில் தீவிரமாக முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை Kingston னிற்கு அருகில் இரு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
காற்றினால் தட்டப்பட்ட பனி மற்றும் வழுக்கல் தன்மை வாய்ந்த வீதிகள் விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை எப்போது போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்பது தெரியவில்லை.
முதலாவது மோதல் பிற்பகல் 2மணியளவில் ஐந்து டிரக்டர் டிரெயிலர்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்டது.இரண்டாவது மேற்கு பாதை லேன்களில் முதலாவதை விட ஒரு கிலோ மீற்றர்கள் தூரத்தில் 7டிரக்டர் டிரெயிலர்கள் மற்றும் 3வாகனங்கள் சம்பந்தப்பட்டது.
ஆரம்ப மோதல்களை தொடரந்து பல சங்கிலி தொடர் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
விபத்தில் சிக்கிய ஒரு போக்குவரத்து லாரியிலிருந்து நச்சுதன்மை வாய்ந்த பொருள் கசிந்ததால் அதன் சாரதி பின்னர் வைத்தியசாலையில் இறந்து விட்டார்.
29பேர்கள் வரை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.
.