அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்யும் கனேடிய அமைப்பு
அமெரிக்காவிற்கான புதிய பயணங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என Girl Guides of Canada என்ற கனடா தேசிய வழிகாட்டல் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் கடினமானது என்ற போதிலும், தமது அங்கத்தவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை கடைப்பிடித்தல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கு அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும் வரை திட்டமிடப்பட்ட எதிர்கால பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க விமான நிலையம் ஊடான வேறு நாடுகளுக்கான பயணங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட மாட்டாதென குறித்த அமைப்பு அறிவித்துள்ளது.
அதிகளவான பெண்கள் அமெரிக்காவிற்கு பயணிக்கின்ற நிலையில், இதனால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது என்றும் குறித்த அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.