ஸ்காபுரோ பகுதி பெற்றோர்களிற்கு பொலிசார் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை?
ரொறொன்ரோ- ஸ்காபுரோ பகுதியில் அறிமுகமற்ற மனிதனால் பிள்ளைகள் அணுகப்படுவதால் பொலிசார் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். ஸ்காபுரோ பக்கத்தில் கடந்த மாதம் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சம்பவம் Burrows Hall Boulevard மற்றும் Purvis Crescent பகுதியில் பிப்ரவரி 10. அன்று பிற்பகல் 3மணியளவில் நடந்துள்ளது. 9வயதுடைய சிறுவர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருக்கையில் வாகனத்தில் வந்த தெரியாத மனிதன் ஒருவன் சிறுவர்களிற்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி காரிற்குள் ஏறுமாறு கேட்டுள்ளான். சிறுவர்கள் ஓடத்தொடங்கிவிட வாகனம் சென்று விட்டது.
இரண்டாவது சம்பவம் மார்ச் 7 காலை 8மணியளவில் அதே Burrows Hall Boulevard, Purvis Crescent பகுதியில் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.10-வயது பையன்களும் ஒரு ஐந்து வயது சிறுமியும் நடந்து சென்று கொண்டிருக்கையில் அறிமுகமற்ற மனிதன் ஒருவன் அவர்களிற்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு சவாரி வழங்குவதாக தெரிவித்தான்.
அச்சமயத்தில் பிள்ளைகள் மறுத்துவிட மனிதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.பிள்ளைகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
மூன்றாவதும் மிக அண்மித்ததமான சம்பவம் மெல்வேன் அவெனியு மற்றும் மமொத் ஹால் டிரெயில் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.25மணியளவில் நடந்துள்ளது.பொலிசாரின் தகவல் பிரகாரம் 10வயது சிறுமி ஒருத்தி மெல்வேன் ஜூனியர் பொது பாடசாலையில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது முகமூடி அணிந்திருந்த மனிதன் ஒருவன் இருண்ட சாம்பல் நிற அல்லது கறுப்பு நிற செடானிலிருந்து இறங்கி சிறுமியை நோக்கி ஓட ஆரம்பித்ததாக தெரிய வந்துள்ளது. சிறுமி பாடசாலைக்குள் ஓடிச்சென்று ஆசிரியரிடம் தெரிவிக்க அவர் பொலிசாரை தொடர்பு கொண்டுள்ளார்.
மூன்று சம்பவங்களிலும் ஒரே மனிதன் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகின்றதென பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவங்களை தனித்தனியாக புலன்விசாரனை செய்வதாக தெரிவித்த பொலிசார் ஒவ்வொரு சம்பவமும் ஒன்றிற்கொன்று மிக நெருக்கமான இடங்களில் நடந்துள்ளதால் பொது பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இவை மிக மிக குழப்பமான சம்பவங்கள் எனவும் பொலிசார் கூறினர்.
அணுகப்பட்ட பிள்ளைகளும் மிக அறிவு பூர்வமாக செயற்பட்டுள்ளனர். காரிற்குள் ஏற மறுத்ததுடன் சம்பவத்தை பெற்றோரிடமும் பாடசாலை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதி பெற்றோரும் பிள்ளைகளும் மேலதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
முதல் இரண்டு சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒரு சம்பவத்தில் 35முதல் 45 வயது மதிக்கத்தக்க தோற்றம் வாசிக்கும் கண்ணாடி அணிந்திருந்தான். Blue Jays சேர்ட் தொப்பி அணிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது சம்பவத்தின் சந்தேக நபர் 5.8முதல்6.1அடி உயரம் கொண்ட நடுத்தர தோற்றம் மற்றும் கறுப்பு ஆடை ஒரு முகமூடி மற்றும் sunglassesஅணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.
தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் (416) 808-4200 அல்லது அனாமதேயமாக Crime Stoppers at (416) 222-TIPS (8477).தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.