நேர மாற்றம் ஆரம்பம். கடிகாரங்களை மாற்றவும்.
இந்த வார இறுதிநாட்களில் பெரும்பாலான கனடியர்கள் தங்கள் கடிகாரங்களை பகல் நேர சேமிப்பாக முன்னோக்கி நகர்த்துவர்.
“spring forward” அதிகார பூர்வமாக ஞாயிற்றுகிழமை அதிகாலை 2மணிக்கு ஆரம்பிக்கின்றது. அனைவரும் மீண்டும் ஒரு தடவை ஒரு மணித்தியால தூக்கத்தை இழக்க நேரிடும்.
1908ல் பகல்ஒளி சேமிக்கும் நேர மாற்றத்தை கனடாவில் உபயோகித்த முதல் நகரம் தண்ட பே ஆகும்.
கனடாவின் அனைத்து பகுதிகளும் இம்முறையை கடைப்பிடிப்பதில்லை. Saskatchewan னின் பெரும்பகுதி, பி.சியின் சில பகுதிகள், வடமேற்கு ஒன்ராறியோ, கியுபெக் மற்றும் நுனவுட் போன்ற பகுதிகள் இவற்றுள் அடங்கும்.
பகல் ஒளி சேமிப்பு நேரம் உலகம் பூராகவும் ஆக 70நாடுகளில் மட்டுமே அனுட்டிக்கப்படுகின்றது முக்கியமாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா.
முதன் முதலில் ஆரம்பித்து வைத்த நாடு யேர்மனியாகும். 1916 ஏப்ரல் 30ல் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது உலகபோர் காலத்தில் ஆற்றலை சேமிக்கும் பொருட்டு கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
லோட் கோவ் தீவு, Australia, ஆகிய நாடுகளில் அரை மணித்தியாலங்கள் மட்டுமே மாற்றப்படும்.மார்ச் மாத இறுதி ஞாயிற்றுகிழமை ஆரம்பமாகும் இந்த மாற்றம் இறுதி ஞாயிறு அக்டோபர் மாதம் முடிவடையும்.