ஹொங் கொங்கில் எட்வேட் ஸ்னோவ்டனிற்கு அடைக்கலம் கொடுத்த குடும்பத்தினர் கனடாவில் தஞ்சம் கோருகின்றனர்.
முன்னாள் NSA ஒப்பந்தகாரர் எட்வேட் ஸ்னோவ்டனிற்கு சீனாவில் தஞ்சம் கொடுத்த அகதிகள் தற்போது கனடாவில் தஞ்சம் கோருகின்றனர் என அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட மூன்று குடும்பத்தினரும் ஹொங் கொங்கில் தங்கினால் துன்புறுத்தல் மற்றும் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்னோவ்டன் 2013ல் அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடினார். NSAயின் கண்காணிப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆயிரக்கணக்கான கோப்புக்களை கசியவிட்டதன் பின்னர் தப்பி ஓடினார். குறிப்பிட்ட அகதிகள் குடும்பங்கள் இவருக்கு இரு வாரங்கள் இருப்பிடம் உணவு போன்றவைகளை வழங்கி ஆதரித்தனர். அதன் பின்னர் இவர் ரஷ்யாவிற்கு சென்று விட்டதாக பிபிசி செய்தி மூலம் தெரிய வந்தது.
சமீபத்திய வாரங்களில் அகதிகளின் வழக்கறிஞர் இக்குடும்பத்தவர்களின் தஞ்சம் கோரும் செயல்பாடுகளை துரிதப்படுத்தவேண்டியது அவசியம் என உணர்வதாக தெரிவித்துள்ளார்.
அகதிகளில் சிறிலங்காவை சேர்ந்த இருவர் தாங்கள் சிறிலங்கா பொலிசாரினால் தொடரப்படுவதாக தெரிவித்துள்ளனர். சிறிலங்காவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள் தாங்கள் பிடிபட்டால் சிறிலங்கா அரசாங்கம் தங்களை சித்திரவதை செய்யும் என அஞ்சுகின்றனர்.
இந்த அகதிகளின் பாதுகாப்பு முயற்சிகள் குறித்து ஸ்னோவ்டன் ருவிட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். இவர்களுடன் மற்றவர்கள்-ஜோசப் கோடன்-லெவிட்- ஸ்னோவ்டன் குறித்த சமீபத்திய படத்தில் ரகசிய தகவல்களை தெரிவிப்பவராக நடித்தவர்-உட்பட.
ஸ்னோவ்டன் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். யு.எஸ்சில் உளவு பார்த்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 30வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
நியாயமான விசாரனைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் தான் யு.எஸ் திரும்ப விரும்புவதாக இவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த அகதிகள் குடும்பத்தினர் மூன்று இளம் மற்றும் நாடற்ற பிள்ளைகள் உட்பட்ட-தங்கள் நாடுகளிலும் ஹொங்கொங்கிலும் சித்திரவதைகளை எதிர் நோக்குகின்றனரென கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த மின் அஞ்சலிற்கு குடிவரவு அமைச்சர் Ahemed Hussen காரியாலயத்தில் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.