வலுபெறும் காணி மீட்பு போராட்டம்..! நாளை முதல் உண்ணாவிரத போராட்டம்
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது காணிகளை படையினர் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து நாளை முதல் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
பிரதேசசெயலாளர் ம.பிரதீபனை இன்று சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று 11வது நாளை அடைந்துள்ளது. எனினும், குறித்த மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு தீர்வு எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நாளை முதல் போராட்ட வடிவத்தை மாற்றி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
You may like this video