தீப்பற்றி எரியும் அவுஸ்திரேலியா! உச்சக்கட்ட பதட்டத்தில் மக்கள்!
அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள New South Walesஐ சுற்றியுள்ள 87க்கும் மேற்ப்பட்ட இடங்களில் தீப்பற்றி எரிவதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
அவுஸ்திரேலியா நாட்டின் New South Wales ல் எங்கு பார்த்தாலும் நெருப்பு பற்றி எரியும் காட்சி தான் தற்போது கண்ணுக்கு தெரிகிறது.
மரங்கள், வீடுகள் மற்றும் பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. பலர் தீக்காயம் ஏற்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2000க்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்க போராடி வருகிறார்கள். Greater Hunter, Central Ranges மற்றும் North Western regions போன்ற பகுதிகளில் நெருப்பின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
Hollisdale, Lower Pappinbarra மற்றும் Beechwood பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இது குறித்து ஊரக தீயணைப்பு கமிஷ்னர் Shane Fitzsimmons கூறுகையில், New South Wales வரலாற்றில் இப்படியொரு தீ பிம்பத்தை பார்த்தது கிடையாது.
காற்றும் அதிகளவு தற்போது வீச ஆரம்பித்துள்ளதால் நெருப்பு அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தீப்பற்றி எரியும் காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், வானிலையும் இதுவரையில்லாத அளவுக்கு 47 டிகிரி என உச்ச வெப்பத்தில் தற்போது இருக்கிறது.
அவுஸ்திரேலியா கடந்த 2009ல் தீயினால் ஏற்ப்பட்ட பேரழிவுக்கு சமமாக இது நிகழ்ந்து வருவதாகவும் Shane கூறியுள்ளார்.