இலங்கை அணிக்கு எதிரான தொடர்: விராட் கோஹ்லியின் சாதனையை ஊதித்தள்ளிய தென் ஆப்பிரிக்க வீரர்
இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி சாதனையை முறியடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று வித போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும், டி 20 தொடரை இலங்கை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் இன்று நடந்த ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இப்போட்டியில் குயிண்டன் டி காக் 36 ஓட்டங்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த ஓட்டங்களை இவர் 74 இன்னிங்ஸில் எடுத்தார்.
இதே ஓட்டங்களை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 75 இன்னிங்ஸில் எடுத்தார். தற்போது அச்சாதனையை டி காக் முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் தென் ஆப்ரிக்க வீரர் ஹசீம் ஆம்லா 57 இன்னிங்ஸ் 3000 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.