நடுவரின் முடிவால் கடுப்பான இந்தியர்கள்: வைரல் வீடியோ
இந்தியா- வங்கதேசத்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது மூன்றாவது நடுவரின் முடிவு இந்திய ரசிகர்களும், போட்டி கமெண்டர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது.
இந்தியா- வங்கதேசம் அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் கடந்த 9ம் திகதி தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 687 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வரும் வங்கதேச அணி மூன்றாவது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹிம் 81 ஓட்டங்களுடனும், Mehedi Hasan Miraz 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் அணித்தலைவர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியை மீட்டனர்.
இந்நிலையில் 50வது ஒவரை அஸ்வின் வீச, ஷகிப் அல் ஹசன் விளையாடினர். இதன்போது, ஓட்டம் எடுக்க எதிர் திசையிலிருந்து ரஹிம் ஓடி வர விக்கெட் கீப்பர் ரன் அவுட் செய்தார்.
களநடுவர், மூன்றாவது நடுவரின் முடிவை கேட்க்க, காட்சியை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார்.
இது ரசிகர்களுக்கும், போட்டி கமெண்டர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது.