ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை விட்டு விலகியது ஏன்? பின்னனி யார்? ஆளுநருக்கு பரபரப்பு கடிதம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்பு, அடுத்த முதலமைச்சராக பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அதிமுக-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் சசிகலாவை தெரிவு செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சசிகலா முதல்வராக தெரிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆதரவும், ஒரு சில இடங்களில் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.
இதைத் தொடர்ந்து பன்னீர் செல்வம் ஆளுநருக்கு தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தான் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தமது தலைமையிலான அமைச்சரவையை விடுவிக்குமாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.