இரவு பூராகவும் குழுக்களை பிசியாக செயல்பட வைத்த வன்கூவரின் புத்தம் புதிய பனிப்பொழிவு!
மெட்ரோ வன்கூவர் அவசர சேவை குழுவினர் இரவு பிராந்தியம் பூராகவும் பொழிந்த வண்ணம் இருந்து புத்தம் புதிய பனிப்பொழிவினால் பிசியாக பணிபுரிந்தனர்.
பாரிய வீதகளில் இரவு முழுவதும் பனி மற்றும் சேறுகளை சுத்தம் செய்வதில் பனிக்கலப்பைகள் ஈடுபட்டிருந்தன.
வாகன விபத்துக்களும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் விபத்துக்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.
பனிப்பொழிவு மற்றும் மர கிளைகள் மின்கம்பங்களில் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் 20,000ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி இருட்டில் விடப்பட்டனர்.
சனிக்கிழமை மேலும் 20சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு காணப்படலாம் என கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.