உலகின் கண்ணுக்கு தெரியாத 8000 அகதிகள்.. எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? அதிர்ச்சி தகவல்
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த சுமார் 8000 அகதிகள் ஜோர்டான் நாட்டு எல்லைப் பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இரு நாடுகளின் எல்லைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இவர்களை பல நாடுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இங்கு இருக்கும் மக்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இருப்பினும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பயந்து அனைவரும் இங்கே வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இங்கு ஏதேனும் அவசரத் தேவை என்றால் மட்டுமே ஜோர்டான் பகுதியில் உள்ள ஐ,நா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இல்லை எனில் அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும். இங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக ஏராளமான குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பரிதாபமாக 11 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.
பல மாதங்களாக இவர்கள் படும் வேதனைகள் நிறைய, இதன் காரணமாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உயிருக்கு பயந்து தினந்தோறும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். திடீர் திடீர் என்று இங்கு நடக்கும் தாக்குதலால் ஜோர்டான் நாட்டு எல்லை இராணுவமும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து ஜோர்டான் நாட்டு இராணுவதளபதி கூறுகையில், தங்கள் நாட்டு எல்லைப்பகுதி திறந்து தான் இருந்தது. அண்மை காலமாகத் தான் மூடியுள்ளோம் என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் இப்பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் தீவிரவாத ஆதரவு நிலையில் உள்ளனர். இதன் காரணமாகவே அவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.