சூழவுள்ள நண்பர்களால் சதி..! கடும் கோபத்தில் மஹிந்த…! ஆட்டங்காணும் கூட்டு எதிர்க்கட்சி
சமகால அரசியல் நடவடிக்கைகளில் ஏற்படும் தொடர் தோல்வியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்பதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளை தனனை சுற்றியுள்ள அரசியல் நண்பர்களின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நுகேகொடையில் நடைபெற்ற பேரணில் ஏற்பட்ட தோல்வி மஹிந்தவின் கோபத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
பாரிய பிரச்சார நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பேரணிக்கு, எதிர்பார்த்த பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய 13,750 பேர் மாத்திரமே நுகேகொட பேரணியில் கலந்து கொண்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு மக்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மஹிந்தவை சூழவுள்ள நண்பர்கள், வீரவன்சை முன்னிலைப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
வாகன மோசடியில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை சாதகமாக மாற்றி மக்கள் முன்னிலையில் கொண்டு செல்ல, விமல், கம்மன்பில மேற்கொண்ட முயற்சியினால் மஹிந்த கடும் கோபமடைந்துள்ளார்.
இந்தப் பேரணிக்கு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநித்துவம்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஓரங்கட்டிவிட்டு சிறிய கட்சியை முன்கொண்டு வருவதற்காக விமல், கம்மன்பில முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியினுள் செயற்படுகின்ற முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசன்ன ரணதுங்கவுக்கு உட்பட பலருக்கு மேடையில் ஆசனங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறிய கட்சிகள் மற்றும் குழுக்கள், தொடர்ந்து மஹிந்தவுடன் செயற்படுவதில் எதிர்காலத்தில் சாதகமான நிலையை ஏற்படுத்தாது.
இதனால் மஹிந்தவை ஓரங்கட்டிவிட்டு வேறு தலைவரை முன்கொண்டு வந்து தங்கள் அரசியல் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே நுகேகொட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.