சச்சினுக்கு ஆட்டநுணுக்கம் கற்றுக் கொடுத்த தமிழன்: யார் தெரியுமா அவர்?
கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கைப் பொறுத்தவரை எந்தவொரு சமரசமும் செய்துகொள்ள மாட்டார். நவீனகால கிரிக்கெட்டில் தலைசிறந்த மட்டைப்பந்தாளராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் பெயருக்குப் பின்னால் எத்தனையோ சாதனைகள் அணிவகுத்து நிற்கின்றன.
காலத்துக்கு ஏற்றார்போல தனது ஆட்டநுணுக்கத்தை மாற்றிக் கொண்டதாலேயே அவரால் 24 ஆண்டுகள் சிறந்த வீரராக திகழ முடிந்தது. பேட்டிங்கைப் பொறுத்தவரை எந்தவொரு சமரசமும் சச்சினிடம் இருக்காது என்பது அவருடன் விளையாடிய வீரர்கள் மட்டுமல்ல, அவரது ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கும் தெரியும்.
இதே கருத்தினை அவருடன் களத்தில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், விராட் கோஹ்லி ஆகியோர் பல்வேறு சூழ்நிலைகளில் பதிவு செய்துள்ளனர்.
தனது ஆட்டநுணுக்கம் குறித்து மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனம்திறந்த சச்சின், பேட்டிங்கில் முழுகவனத்தையும் அதேநேரத்தில், உங்களது பேட்டிங்கை மேம்படுத்த யார் ஆலோசனை கூறினாலும் அதனை பரிசீலிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் மட்டுமல்ல உங்கள் மீது அக்கறைகொண்ட ரசிகர் ஒருவராலும் உங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கிடைக்கலாம்.
சென்னையில் உணவக ஊழியர் ஒருவர், பேட்டிங்கின்போது முழங்கை பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் எல்போ கார்ட் (elbow guard), ஸ்விங் செய்யும்போது பேட்டின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறினார்.
அது நூற்றுக்கு நூறு உண்மை. அவரது அந்த கருத்தினை ஏற்றுக்கொண்டு அந்த குறையைச் சரி செய்தேன். உங்களை மேம்படுத்திக்கொள்ள திறந்த மனதுடன் அனைவரின் கருத்துகளையும் கேட்பதே சிறந்தது என்று சச்சின் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர் மூன்றுவிதமான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து நூறு சதங்களுடன் 34,357 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.