பிரித்தானியா பிரதமர் தெரசா மே.. டிரம்ப் மனைவிக்கு தர போகும் ஆடம்பர பரிசு: என்ன தெரியுமா?
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரம்ப் ஜனாதிபதி ஆன பின்பு அவர் மனைவி மெலானியா டிரம்பிற்கும் பலர் தங்கள் வாழ்த்துகள் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே வரும் வெள்ளிக் கிழமை வெள்ளை மாளிகை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தெரசா மே மெலானியா டிரம்பிற்கு சிறப்பு பரிசுப் பொருள் ஒன்றை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பிரித்தானியாவின் மிகவும் ஆடம்பர பரிசு பொருளான hamper packed ஒன்றை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் ஆப்பிள் பழச்சாறு, damson ஜாம், போன்ற பிரித்தானியாவின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த பரிசு கோடை விடுமுறைக்கு பிரித்தானியாவின் Chequers பகுதிக்கு வரும் டிரம்ப் மற்றும் மெலனியாவை மிகவும் கவரும் வகையில் இருக்கும் என்று அவர் நம்புவதாக கூறப்படுகிறது.