மகனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டொனால்டு டிரம்பின் மனைவி
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு ஒபாமா பதவியேற்றுக்கொண்ட போது கூடிய மக்கள் கூட்டம் இந்த ஆண்டு இல்லை.
பதவியேற்வு விழாவில் தனது மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறின.
அதில் ஒன்றுதான் டிரம்பின் மனைவி மெலேனியா ட்ரம்ப் தனது மகனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான வீடியோ.
நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது டொனால்டு டிரம்பின் வார்த்தைகளை கேட்ட மெலேனியா அந்த சந்தோஷமான தருணத்தை தனது 10 வயது மகன் Barron – யுடன் பகிர்ந்துகொள்வதற்காக தனது கைகளை தனது மகனின் கைகளோடு சேர்ந்து cheer up செய்யும் பொருட்டு அடிக்க முற்பட்டுள்ளார்.
ஆனால், அதனை அவரது மகன் கண்டுகொள்ளவில்லை. அடுத்த முறையும் அவ்வாறு செய்ய முற்படவே, தனது தாய் கையை தூக்கும் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு அதன்பின்னர், தனது கைகளை மேலே உயர்த்தி Buzzle விளையாடுவது போன்று விளையாடியுள்ளான்.
இது டொனால்ட்டின் மனைவி மெலேனியாவுக்கு தமர்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.