போதையில் தன் பெயரையே மறந்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சென் குடிபோதையில் தன் பெயரையே மறந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சென் தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
இவர் மெல்போர்ன் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றிற்குச் சென்றபோது இங்கிலாந்து டென்னிஸ் வீரர் டான் இவான்ஸைச் சந்தித்துள்ளார்.
அப்போது, இவான்ஸ் பீட்டர்சென்னுடன் ஒரு செல்ஃபி எடுக்க கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு பீட்டர்சென் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய இவான்ஸை அவமதித்துவிட்டதாக எண்ணி வருந்திய பீட்டர்சென் ட்விட்டரில் மன்னிப்பு ட்வீட் போட்டிருக்கிறார்.
“அன்று நன்றாக குடித்துவிட்டு, போதை தலைக்கேறிப்போனதில் என் பெயரே எனக்கு மறந்துபோய்விட்டதால் தன்னையறியாமல் அப்படி நடந்துவிட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.
Hey @KP24 any chance I can have a picture? You refused me the other night in the crown
@Evo151216 apologies mate! I started drinking at 1pm so didn’t even know my name by the time that function started!
இத்துடன் நில்லாமல் தான் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் விதமாக, தான் விளையாடும் பிக் பாஷ் லீக் போட்டி ஒன்றை நேரில் பார்க்க டிக்கெட் வாங்கிக்கொடுத்து ஆறுதல் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.