Apple TV பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குதூகலமான செய்தி!
பல்வேறு வகையான இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனம் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளையும் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது.
இதில் பல்வகைப்பட்ட அப்பிளிக்கேஷன்கள் மற்றும், கேம்களை நிறுவிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை காலமும் 200MB வரையிலான கொள்ளளவு வரைக்குமே அப்பிளிக்கேஷன் மற்றும் கேம்களை நிறுவிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது இவ் வசதி இருபது மடங்காக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 4GB வரையான அப்பிளிக்கேஷன்கள், ஹேம்களை நிறுவிக்கொள்ள முடியும்.
இதற்கு பிரதான காரணமாக தற்போது உருவாக்கப்படும் அப்பிளிக்கேஷன்கள் அதிக கொள்ளவினை உடையதாக இருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பயனர்களுக்கான வரப்பிரசாதத்தினை அதிகரிப்பதுவும் மற்றுமொரு காரணமாகும்.