அய்யோ அது நானே இல்லை! சர்ச்சையால் டிவிட்டரிலிருந்து வெளியேறிய த்ரிஷா
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சமூக வலைதளங்களில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பில் நடிகை த்ரிஷா உறுப்பினராக இருக்கிறார்.
இதனால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என்று நினைத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர்.
சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான வார்த்தைகளாலும், மீம்ஸ்களாலும் த்ரிஷாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். நேற்று ஒரு படிமேலே சென்று இவர் நடிக்கும் கர்ஜனை படப்பிடிப்பையே நிறுத்தினார்கள்.
இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத த்ரிஷா, பெண்களை மதிக்காமல் அவர்களை திட்டுக் கொண்டு திரியும் நீங்கள் எல்லாம் தமிழனா? என்று ஆவேசப்பட்டார்.
இதற்கிடையில் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியான ஒரு பதிவு அனைவரையும் கொந்தளிக்க வைத்துவிட்டது.
அந்த பதிவில், நான் ஒரு தமிழன், நான் பீட்டாவுக்கு ஆதரவு அளிக்கிறேன். எவ்வளவு பழமையான கலாச்சாரமாக இருந்தாலும் விலங்குகளை கொடுமைப்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. ஜல்லிக்கட்டுக்கு தடை வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
இதனால் ஆவேசமான ரசிகர்கள் அவர்களை கண்டபடி திட்ட ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்ட த்ரிஷா, தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த பதிவை தான் போடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்துள்ளார்.