குழந்தையை சுமந்து வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திக்கையாளர்: நீதிமன்றம் அதிரடி தண்டனை
ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை எட்டி உதைத்த பெண் பத்திரிக்கை ஒளிப்பதிவாளர் குற்றவாளி என கண்டறிப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2015ம் ஆண்டு செர்பியாவிலிருந்து ஹங்கேரி எல்லையில் குழந்தையுடன் ஓடி வந்த அகதியை, ஹங்கேரி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான Petra Laszlo என்ற பெண் காலால் எட்டி உதைத்தார்.
இதில், நிலை தடுமாறி அகதி குழந்தையுடன் கீழே விழுந்தார். குறித்த காட்சி வெளியாகி கடும் கண்டனத்திற்குள்ளானது. இதனையடுத்து, Petra Laszlo பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் Petra Laszlo நீதிமன்றத்தால் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து, Petra Laszloக்கு மூன்று ஆண்டுகள் தகுதிகாண் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.