இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

இன்னும் சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவிருக்கும் பராக் ஒபாமா, மக்கள் மத்தியிலான தனது கடைசி உரையை நேற்றிரவு ஆற்றினார். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்பின் பெயரைக் கூட உச்சரிக்காத ஒபாமா, ட்ரம்ப்புக்கான எச்சரிக்கைகளை தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டார்.

அவரது சொந்த ஊரான சிக்காகோவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஒபாமா மேடையேறியபோது, “மேலும் நான்கு வருடங்கள்” என்று மக்கள் கூட்டம் ஒரு மந்திரம் போலத் தொடர்ந்து உச்சரித்தது. எவ்வளவு முயன்றும் அதை ஒபாமாவால் நிறுத்த முடியவில்லை.

“என்னை ஒரு நொண்டி வாத்து என்று நீங்கள் குறிப்பிடலாம். ஏனென்றால் நான் சொன்னதன் படி யாரும் நடந்துகொள்ளவில்லை. நொண்டி வாத்துக்கு அவ்வளவுதான் மரியாதை” என, நகைச்சுவையாக தனது பேச்சை ஆரம்பித்த ஒபாமா, கண்ணீருடன் தனது பேச்சை நிறைவுசெய்தார்.

“எனது ஆட்சிக்காலத்தில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும், சில ஏமாற்றங்களும் இருப்பதை நான் அறிவேன். கடந்த எட்டு ஆண்டுகளில், உங்களுக்குத் தரப்பட்ட பல உறுதிமொழிகள் அவ்வண்ணமே நிறைவேற்றப்பட்டபோதிலும், சில உறுதிமொழிகளைக் காப்பாற்ற முடியாமல் போனதையும் நான் அறிவேன்.

“இந்நாட்டின் தலைமை இன்னும் சில நாட்களில் மாறப்போகிறது. ஜனநாயக முறையில் அதனை செயற்பட அனுமதித்தால் மட்டுமே அதன் பலம் மக்களாகிய உங்களுக்குப் புரியும். உங்களது அரசியல் நாகரீகமே நம் நாட்டு அரசியலில் பிரதிபலிக்கும். கட்சி, இன வேறுபாடுகள் இன்றி செயற்பட்டால் மட்டுமே மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முடியும்.

“இன்னும் பத்து நாட்களில் எமது ஜனநாயகத்தின் மாண்பை சர்வதேசமுமே பார்க்கப்போகிறது. இனம், சமயம், மொழி, பால் வேறுபாடுகள் இவை எவையும் அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனையும் பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளைத் தடுத்துவிடக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குற்றத் தடுப்புச் சட்டங்கள் என்பனவும் எல்லோருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும்.

“நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. அந்த இடத்தை அடைவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின்போது யாரையும் பாரபட்சமாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தப்பட்டால் குறித்த இடத்தை நம்மால் அடைய முடியாது போய்விடும். இதனால்தான் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் குறித்த பாகுபாடுகளை நான் வெறுக்கிறேன்.

“ஐஎஸ் பயங்கரவாதம் எமது மக்களைக் கொல்ல முயற்சிக்கும். ஆனால் அமெரிக்காவை அதனால் வெல்ல முடியாது. ரஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகளால் உலக அரங்கில் எம்மைப்போல் செல்வாக்குச் செலுத்த முடியாது. ஆனால், நாம் நம் நாட்டு மக்களையே சிறுபான்மை என்று கூறிக்கொண்டு அவர்களை நசுக்கும் முயற்சியிலேயே ஈடுபடத் தொடங்கினால் இந்த நிலை மாறலாம்.

“எனது ஆட்சிக்காலத்தில் நீங்கள் தந்த ஆதரவாலும், ஒத்துழைப்பாலுமே என்னால் இவ்வளவு தூரம் இந்த நாட்டை நிர்வகிக்க முடிந்தது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது பணியின் தன்மையைப் புரிந்து என்னுடன் ஒத்துழைத்த எனது மனைவி மிஷேல், பிள்ளைகள் மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடேன் ஆகியோருக்கும் நன்றி” என்று கூறிய ஒபாமா தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.

தனது பேச்சில், புதிய அரசு என்ற வார்த்தையை ஒபாமா குறிப்பிட்டபோதெல்லாம், கூடியிருந்த மக்கள் கூட்டம் “இன்னும் நான்கு ஆண்டுகள்” என்று கோஷமிட்டன. என்றாலும், “உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மற்றொரு ஜனாதிபதிக்கு அதிகாரம் கைமாறும்போது அதை அமைதியாக வரவேற்பதே நமது நாட்டின் பலம்” என்று குறிப்பிட்டார்.

– See more at: http://www.canadamirror.com/canada/78203.html#sthash.CYS8vfOG.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News