முதல்வரின் சமூகம் சார்ந்த சந்திப்புகள்.

முதல்வரின் சமூகம் சார்ந்த சந்திப்புகள்.

தமிழ் வணிக சமூகத்துடனான சந்திப்பு:

புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழர் வணிகத்துறைகளில் மேம்பட்ட வரகின்றனர். தன்னினத்துக்குள்ளான வணிகத்திலிருந்து விரிந்து நாடு சர்வதேசம் தழுவிய வணிகத்துறைகளில் தமிழர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாயகத்திலும் முதலீடு செய்யவும் தாயகத்தின்மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவவும் விரும்புகின்றனர்.

அவ்வாறான சமூகநலன் மீதும் அக்கறை கொண்ட தமிழ் வணிகர் பலரையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். தாயகம் தொடர்பில் வணிகர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக இச்சந்திப்பு அமையும்.

பெண்களுடனான சந்திப்பு:

நடைபெற்ற போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. சிறுமியராகவும் இளம் மனைவியராகவும் தாயாகவும் பெண்கள் படும் துன்பம் மிகப் பெரியது. அவர்களுடைய வாழ்வில் நிரந்தரமான மீட்சியைக் கொண்டுவரவேண்டும் என முதல்வர் விரும்புகிறார். பெண்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆழமாகப் பேசுவதற்காக இச்சந்திப்பு ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்தோரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இளையோர் சந்திப்பு

தமிழர் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறையாக வலுவோடு வளர்ந்து வரகின்ற இளைளோரைச் சந்திப்பதுவும் முதலிவரின் இலக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. தாயக மக்கள் மீது இளையோர் கொள்ளும் தொடர்பு நீண்ட காலத்திற்குப் பயன் தரவல்லது என்பதால் முதல்வர் வரகையில் இயையோர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட இளைய சமூகம் தாயகத்தில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. கல்வியும் அடிப்படைவ hழ்வாதாரமும் இன்றி பல இளையோர் தம் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். அவர்களை மேம்படுத்துவது தொடர்பாகப் பல விடயங்கள் இளையோர் சந்திப்பில் இடம் பெறும்.

சமூகஅமைப்புக்களோடான சந்திப்பு

கனடாவில் தாயக ஊர் சார்ந்த சங்கங்கள் உட்படப் பல சமூக அமைப்புக்கள் உள்ளன. அவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துத் தாயக மேம்பாடு பற்றிப் பேசுவதற்கு இச்சந்திப்பு ஒழுங் செய்யப்பட்டுள்ளது.

சனவரி 08 ஞாயிற்றுக்கிழமை

முதல்வருடன் ஒரு மாலைப் பொழுது.

முதல்வர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் உதவிப்பாலம் என்ற திட்டத்திற்கமைய தாயக மக்களுக்கு உதவும் நோக்கோடு நிதிசேர் நகழ்வாக இது அமைகிறது.

சனவரி 10 செவ்வாய்க் கிழமை

பிரம்டன் மாநகர சபையுடன் சந்திப்பு

எதிர்காலத்தில் தாயக மேம்பாடு சார்ந்த பல பணிகளைப் பிரம்டன் மாநகரசபையோடும் இணைந்து முன்னெடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. அதனை வலுப்படுத்தும் சந்திப்பாக இது அமையும்.

சனவரி 14 சனிக்கிழமை

இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்து

முதல்வர் வருகையில் முதன்மைபெற்ற நிகழ்வாக இது அமையும். மார்க்கம் மாநகரசபை மேயர அவர்களும் வடமாகாண முதல்வர் சி.வி. விக்கினேசுவரன் அவர்களும் இதில் கையெழுத்திடுவர்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை

மார்க்கம் பொங்கல் விழா

மார்க்கம் மாநகரசபையின் அனுசரணையுடன் நடத்தப்படும் பொங்கல் விழாவில் முதல்வர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் பொதுக் கூட்டம்.

பல்லாயிரம் மக்கள் கூடும் பிரமாண்டமான அரங்கில் முதல்வரின் பேருரை இடம் பெறும்

வடமாகாணசபை முதலமைச்சர் திரு. சி.வி.விக்னேஸ்வரன் ஊடகர் சந்திப்பு

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News