கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடுகள் தீக்கிரை!
கனடா- ரொறொன்ரோவின் வடக்கில் பிராட் வோட்மேற்கு கிவிலிம்பெரி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கட்டப்பட்டு கொண்டிருந்த ரவுன் கவுஸ் வீடுகள் சில தீக்கிரையாகியுள்ளது.
அதிகாலை 5மணியளவில் லைன் 6 மெல்பேர்ன் டிரைவ் அருகில் தீ ஏற்பட்டது.
தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்தை அடைந்த போது இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து விட்டதாகவும் சுவாலை மூன்றாவது வீட்டில் பரவி விட்டதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை தீ பரவாமல் தடுப்பது தங்கள் முக்கிய முன்னுரிமையாக இருந்ததெனவும் அவர் கூறினார்.
அருகாமையில் இருந்த பல வீடுகள் வெளியேற்றப்பட்டன. வீடுகளில் வசித்தவர்கள் பேரூந்துகள் மூலம் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டனர்.
தீ பிடித்ததற்கான காரணம் குறித்த புலன் விசாரனை இடம்பெறுகின்றது.