அமெரிக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு..! 8 பேர் காயம், 5 பேர் பலி: இரத்த வெள்ளத்தில் பயணிகள்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் மர்ப நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவயிடத்திலேயே குண்டடிப்பட்டு பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள Fort Lauderdale விமான நிலையத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விமான நிலையம் அமெரிக்காவின் மிகவும் பரபரப்பு மிகுந்த 25-வது விமான நிலையம் என்று கூறப்படுகிறது. இன்று பிற்பகல் நூற்றுக்கணக்கான பயணிகள் அங்கு பயணம் மேற்கொள்ள காத்திருந்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் விமானநிலையத்தின் டெர்மினல்-2 என்று அழைக்கப்படும் பொருட்கள் வைக்கும் பகுதியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் அலறிஅடித்து ஓடியுள்ளனர்.
இதில் முதலில் 9 பேர் காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் பலியாகியதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தற்போது 5 பேர் பலியாகியிருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் காயமடைந்தவர்களை பொலிசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிசார் கைது செய்து காவலில் வைதிருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமான நிலையத்தில் அமைதி நிலை திரும்பியுள்ளதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் இன்னும் விமான நிலையத்தை விட்டு பொலிசார் வெளியேற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின் போது வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இருந்ததாகவும்மேலும் இந்த தாக்குதலை நடத்திய நபர் Esteban Santiago என்றும் 26 வயது இருக்கும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.