சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மதம் மாறிவிட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மதம் மாறிவிட்டார் என சில போட்டோக்களுடன் கூடிய தகவல்கள் தற்போது பரவி வருகிறது.
இதில் ரஜினி கிறிஸ்தவ முறையில் பேப்டிசம் என்னும் ஞானஸ்நானம் எடுத்த படமும், வெளிநாட்டு கிறிஸ்தவ போதகரிடம் ரஜினிகாந்த் ஜெபம் செய்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படமும் வெளியாகியுள்ளது.
தற்போது வைரலாகி வரும் இந்த தகவலால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இது பற்றி ரஜினி ரசிகர்களில் மிக முக்கியமானவர் சொன்னது, எங்கள் தலைவர், கிறிஸ்டியனாக மாறவில்லை.
கபாலி படம் முடிந்த பின்னர் அவர் நியூயார்க் சென்று அங்கு 50 நாட்கள் தங்கினார். அப்போது அங்குள்ள தேவாலயத்திற்கு அழைப்பில் பேரில் செல்லும் போது இயற்கையாக நடந்த நிகழ்வு.
உடல் நலம் குணமாக வேண்டியே அவருக்கு இந்த முறையில் பிராத்தனை செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் மற்ற ஆலயங்களுக்கும் சென்றுள்ளார். மதம் மாறவில்லை எனவும் சொல்லிருக்கிறார்.