டோனி இதை செய்திருந்தால்.. வீட்டின் முன்பு போராட்டம் உறுதி: பிரபல கிரிக்கெட் வீரர்
இந்திய அணியில் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளின் தலைவராக இருந்து வந்தவர் மகேந்திரசிங் டோனி. இவர் நேற்று திடீரென்று தன்னுடைய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது இந்திய ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவித்ததால் ரசிகர்கள் அனைவரும் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
டோனி தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் டோனி தலைவர் பதவியில் இருந்து விலகியது குறித்து கூறுகையில், டோனி மட்டும் தலைவர் பதவியைத் துறந்ததற்கு பதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால், அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டிருப்பேன். அவர் தொடர்ந்து விளையாடுவதற்கு முடிவெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் தோனி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.