தாயின் மரணம் கூட தெரியாமல் நடித்த நாகேஷ்- கலங்கவைத்த சம்பவம்
தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் நாகேஷ். வார்த்தைகளால் நகைச்சுவை செய்து கொண்டிருந்த காலத்தில் உடல்மொழியில் நகைச்சுவையை அறிமுகம் செய்து வைத்த மகா கலைஞன். கடந்த 2009ம் ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இவரை பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றை இயக்குனர் மனோபாலா பகிர்ந்துள்ளார். நாகேஷ் மிகவும் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாராம். மூன்று வருடத்தில் 500 படம் நடித்து பலருக்கும் தெரியாத சாதனையை படைத்துள்ளாராம்.
அந்த சமயத்தில் தன்னுடைய தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பாராம். ஊட்டியிலிருந்து படப்பிடிப்பு முடிந்து ஆசையோடு தாயை பார்க்க வரும் போது காரிலிருந்து ஒரு இடத்தில் இறங்கி முகம் கழுவிக்கொண்டிருந்தாராம். அப்போது நாகேஷின் தாயின் உடலுக்கு அவரின் மாமா தீவைத்துக்கொண்டிருந்தாராம்.
இறந்த 3 நாட்களாகியும் நாகேஷை தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்ததாம். இந்த சம்பவம் இன்னும் எனது மனதை விட்டு அகலவில்லை, இத்தனை சோகத்தையும் மறைத்து நம்மை சிரிக்க வைத்த கலைஞன் என்று கூறி மனோபாலா நெகிழ்ந்து போனார்.