ஹைட்ரோ வண்ணிற்கு எதிராக சைபர் அச்சுறுத்தல்.!
ரொறொன்ரோ–மின்சார விநியோகஸ்தர்களிற்கெதிராக சைபர் அச்சுறுத்தல் இடம் பெறுவதாகவும் இது குறித்த கனடிய சட்ட அமுலாக்கல் முகவர்களினால் நடைபெற்று வரும் விசாரனைக்கு தாங்கள் உதவுவதாக ஒன்ராறியோ ஹைட்ரோ வண்தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சைபர் அச்சுறுத்தல் கம்பனியின் IP முகவரியை இலக்கு வைத்துள்ளதாக கருதுவதாகவும் இது பழமையானதுடன் செயலற்றதும் என கம்பனியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி றிக் ஹெயர் தெரிவித்துள்ளார்.
அதன்மின் அமைப்பு சமரசத்திற்கு உட்பட்டதென நம்புவதற்கு காரணம் எதுவும் இல்லை என கம்பனி நம்புகின்றது.
இது குறித்த கருத்துக்களிற்கு ஆர்சிஎம்பி உடனடியாக பதிலளிக்கவில்லை.