ரூ.92 கோடி மதுப்புள்ள நகைகளை அள்ளிச் சென்ற கும்பல்: வெளியான பரபரப்பு காட்சிகள்
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தினிடையே நள்ளிரவில் 5 மில்லியன் பவுண்டு மதிப்பிலான நகைகளை கும்பல் ஒன்று அள்ளிச் சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல நகை வியாபார நிறுவனமான Gregg Ruth ன் கிளை ஒன்றில் தான் குறிப்பிட்ட அதிர வைக்கும் கொள்ளை நடந்த்கேறியுள்ளது.
நியூயார்க் நகரம் புத்தாண்டு கொண்டாட்டங்களை வாணவேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி வந்த ஞாயிறு இரவு, 3 கொள்ளையர்கள் குறித்த கொள்ளையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கொள்ளை நடந்தேறும் போது சில கட்டிடங்கள் தொலைவில் Times சதுக்கத்தில் நகரத்தில் உள்ள 7,000 பொலிசார் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் குறித்த கடையில் நின்று வைரம், தங்க நகைகள் என மொத்தம் 4.9 மில்லியன் பவுண்டு (இலங்கை மத்திப்பில் ரூ.918,852,470.00 கோடி) அளவுக்கு கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
100 சதவிகிதம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ள இந்த கொள்ளை சம்பவத்தில், கொள்ளையர்கள் மாபெரும் தவறு ஒன்றையும் செய்து விட்டு தப்பியுள்ளனர் என குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கொண்டுவந்த பைகள் மொத்தமும் நகைகளை நிரப்பிச் சென்ற கொள்ளையர்களில் இருவர் தங்களது முகத்தை மிக தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில் அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிய விட்டு சென்றுள்ளனர்.
மட்டுமின்றி இந்த கொள்ளையில் ஈடுபட்ட 3 நபர்களைத் தவிர நான்காவது ஒரு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
காரணம், குறித்த கொள்ளையின்போது கொள்ளையர்களில் ஒருவர் தமது தொலைப்பேசியில் இன்னொரு நபருடன் தொடர்பு கொண்டுள்ளதை பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.
இருப்பினும் இதுவரை குறித்த கொள்ளையர்களை பொலிசாரால் பிடிகூட முடியவில்லை என்றாலும், இந்த சம்பவத்தில் குறித்த கடையில் பணிபுரியும் ஒருவரது உதவி இவர்களுக்கு கட்டாயம் கிட்டியிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் பொலிசார் சந்தேகத்தை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தற்போது விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்தியா சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.