ரணிலை நாட்டில் வைத்தே மடக்குவேன்! மஹிந்த பகிரங்க சவால்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு சவால் விடும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது மஹிந்த இந்த கருத்தினை வெளியிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நான் ஒன்றும் முதுகில் குத்துபவர் அல்ல.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்லும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பது தான் எனது திட்டம்.
தற்போதைய ஆட்சியாளர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முரடர் குழு, அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்புகிழன்ற நாள் வெகு தொலைவில் இல்லை.
ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவியமை தாம் செய்த தவறு என்று இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த சவால் விட்டிருந்தார். இந்நிலையில் அடுத்தவாரம் தாம் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முடிந்தால் தனது ஆட்சியைக் கவிழ்க்குமாறும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து அமைத்துள்ளது.