பிரபாகரனுக்கு நாடு அச்சமடைந்துள்ளதா?? – நாட்டிற்கு முக்கிய திருப்பு முனைகள் ஏற்படும்..!
விடுதலைப்புலகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் இன்னும் நாடு அச்சமடைந்துள்ளதா? அவர் பிரதமராக தகுதி பெற்றவர் என்று விஜயகலா கூறிய கருத்திற்கு நாடு அமைதியாக உள்ளது என பிவிதுருஹெல உறுமய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும், நாட்டில் பைத்தியக்காரத்தனமாக செயற்பட்ட பிரபாகரன் கல்லறைகளை உருவாக்கியவர். அழிவை ஏற்படுத்தி நாட்டிற்கு துரோகம் செய்தவர்.
அவ்வாறான தொரு நபர் இன்று இருந்திருந்தால் நாட்டின் பிரதமராக தகுதியான நபர் என விஜயகலா நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இப்போது நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அப்படியானால் பிரபாகரன் இருந்திருந்தால் அந்தப் பதவியை கொடுக்க நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?
இந்தக் கேள்வியை பிரதமரான உங்களிடம் நாம் கேட்கின்றோம் எனவும் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.
இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கருத்து தெரிவிக்கையில்,
நாடு இந்த வருடத்தின் முக்கிய காட்டிக்கொடுப்புகளை நிறைவேற்றும், அதனால் பல திருப்புமுனைகள் ஏற்படும் அதில் முக்கியமானது நாட்டை தமிழர்களுக்கு கொடுப்பதே. அது எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும்.
அதேபோன்று நாட்டை பலம் மிக்க பிரதான நாடுகளுக்கு கொடுத்து விடும் அபாயமும் இந்த வருடம் நிறைவேற்றப்படும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.