தங்கமும் வெள்ளியும்..! ஒய்யார நடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஒலிம்பிக் நாயகிகள்
ஹைதராபாத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, கரோலினா மரின் உள்ளிட்டோர் ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு கலக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
இதில் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் மோதிய இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கமும், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் தங்கப் பதக்கமும் வென்றனர்,
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடக்கும் பிரீமியர் பேட்மிண்டன் தொடரில் இருவரும் விளையாடி வருகின்றனர்.
கரோலினா Hyderabad Hunters சார்பிலும், சிந்து Chennai Smashers சார்பிலும் விளையாடுகின்றனர்.
இந்நிலையில் இரவு விருந்தில் கலந்து கொண்ட இவர்கள் ராம்ப் வாக்கில் கலந்து கொண்டு அசத்தினர்.
இவர்களுடன் அஸ்வினி பொன்னப்பா, பிரான்ய் குமார், ஸ்ரீகாந்த், கஷ்யாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.