42 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைந்த இந்திய வீரர்கள்
இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 42 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின், பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதே போன்று பண்முக ஆட்டக்காரருக்கான வீரர்கள் பட்டியலிலும் முதல் இடம் வகிக்கிறார்.
இந்திய அணியைச் சேர்ந்த மற்றோரு பண்முக ஆட்டக்காரரான ரவீந்தர ஜடேஜா 3 வது இடத்திலும், பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடமும் வகிக்கிறார்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இரண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் இரு இடங்களை பிடிப்பது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்திருந்தனர்.
சுமார் 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதே போன்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா அணி 15 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடம் வகின்றது.